வழக்கம் போல் காலையிலே மாணவர்கள் நிகழ்ச்சிக்கு தயாராக இருந்தார்கள். பளீரென்ற வெள்ளை மற்றும் நீல சீருடையில் மாணவர்களை குளிர் சூழ்ந்த அதிகாலையில் பார்த்தபொழுது என் இளமைகாலம் என் கண்முன் தெரிந்தது. அதிக எண்ணையில் சீவிய தலைமுடியும் பவுடருமாக குழந்தைகள் நிகழ்ச்சிக்கு தயாராகியிருந்தார்கள். பள்ளியை நிர்வகிப்பது அதன் தாளாளர், நிகழ்ச்சிக்கு அனைவரும் வரவேண்டும் என்று காலையிலிருந்தே மைக்கில் அன்போடு ஊர் மக்களை கேட்டுக்கொண்டிருந்தார். அதற்க்கு முந்திய நாள் எங்கள் ஊர் மாடசாமி கோயில் கோடை என்பதால் மக்கள் மறுநாள் காலையில் மட்டன் சமைப்பதிலேயே ஆர்வமாக இருந்தார்கள். எங்கள் ஊரில் வாரம் ஒருநாள் மாமிசம் என்ற கோட்பாடு கிடையாது. ஏதாவது விஷேசம் என்றால் மட்டுமே அசைவம் சமைப்பார்கள். காப்பிக்கடை தாத்தா எனக்கு விபரம் தெரியாத நாட்களிலிருந்தே சாமி ஆடிக்கொண்டிருந்தார் அவரது மறைவுக்குப்பின் சாமியாடிய யாருமே செத்த பிணத்தின் எலும்பை எடுத்து வரவில்லை என்பது பெரிய குறையாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சாமியாடிய பொன்ராஜ் அண்ணனால் சுடுகாட்டிற்கு செல்ல இயலவில்லை, பூசாரி உத்தரவு கொடுக்கவில்லை என்பது காரணமாக சொல்லப்பட்டது. எங்கள் ஊரில் சாமியாடுவது பார்ப்பதற்கு உக்கிரமாக இருக்கும், சாமி வந்ததன் காரணம்aஅக இருபது வயது பையன் சூடாக இருக்கும் பொங்கல் பானையை வெறும் கையால் தூக்கி கோயிலை சுற்றுவதை பார்த்திருக்கிறேன். இந்த நிலையில் சென்ற ஆண்டு ஐ டி ஐ படித்துவிட்டு கேரளாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பத்திரக்கனி தன் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து கோயில் கோடை சமயத்தில் ஊர் திரும்பிவிட்டிருந்தான். வழக்கம்போல் கோடை ஆரம்பமானது, அவன் அவனது பெற்றோரிடம் தான் இந்தமுறை கோவிலுக்கு வரப்போவது இல்லை என்று தெரிவித்திருந்தான். ஆனால் சரியாக பதினோரு மணிக்கு கோயிலுக்கு வந்துவிட்டிருந்தான். யாருமே எதிபாராவிதமாக சாமி அவனுள் உக்கிரமாக ஏரத்துவங்கியது. அந்த கோயில் கோடிக்கு நான் சென்றிருக்கவில்லை மறுநாள் அம்மா அதை போனில் விவரித்த பொழுது, கோவில் திருவிழாவுக்கு செல்ல முடியாமையை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். எந்த ஒரு விஷயத்தையும் சுவாரசியமாக சொல்லுவதில் மாரிசெல்வம் சூரன் என்னை மிகவும் வெறுப்பேற்றினான். அதனால் இந்த முறை சுதாரித்துக்கொண்டேன், ஒரு நாள் முன்பே ஊருக்கு சென்றுவிட்டேன். சாமியாட்டம் ஆரம்பமானது. ஊர் மக்கள் அனைவரும் பக்தியோடு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். பத்திரக்கனியை மாடன் இன்னும் பற்றிக்கொள்ளவில்லை ஆனால் மற்ற துணை சாமிகள் தாளமுடியாது ஆடிக்கொண்டிருந்தார்கள். மேளங்கள் முழங்கிக்கொண்டிருக்க, வில்லுப்பாட்டுக்காரர் மாடனை ஆவேசமாக கூப்பிட்டுக்கொண்டிருந்தார். சாமி வேட்டைக்கு போகவில்லை என்றால் அதை போக