Thursday, July 26, 2012

அடலேறிகளின் அகராதியே

தி.மு.க. காரர்கள் அவர்களது கட்சி போஸ்டரில் "அடலேறிகளின் அகராதியே" உன் வழி நடப்போம் என்ற வாசகத்தோடு நகரில் பல இடங்களில் ஒட்டியிருந்தார்கள்.  முதலில் அடலேறு என்றால் என்ன?  புரியாத வார்த்தைப்பிரயோகத்தை பயன்படுத்தி தன்  தலைவரை வாழ்த்துவதன் அரசியல் என்ன?  எளிய தமிழ் வாசிப்பைக் கூட விரும்பாத தமிழன் இத்தகைய வார்த்தைபிரயோகத்தைப் படிக்கும் போது தமிழ் வாசிப்புக்கு இன்னும் கடுமையான மொழி என்று எண்ண மாட்டானா? பள்ளிப் புத்தகங்களில்தான் தமிழை மொக்கையாக எழுதி வாசிப்பனுபவத்தை சிதைக்கிறார்கள் என்றால் சுவரொட்டிகளிலும் இந்த அதகளம் தேவைதானா?